லண்டன் வானொலியில் அம்மாவின் ஒலித்தொகுப்பு வழங்கியவர் திருமதி ராகினி பாஸ்கரன் ஜெர்மனி. கேட்டு மகிழுங்கள். உங்கள் மனதில் தோன்றும் உனர்வுகளை எழுதுங்கள்.
குயில் குதுகுலம் வானொலித்தொகுப்பு- அறிதற்கரிய பாடல் தொகுப்பு இசைத்தேடல்
|
யாரையுமே தேடவில்லை என் வாழ்வில்
உறவுகளாய் வந்த விசயங்கள் என்ன என்ன என்று
சிந்திக்கப் போகின்றீர்களா அதற்கு முன்
நானே சொல்லிவிடுகின்றேன்.
இசையோடு இன்பம் கலந்து
கடவுள் கருணை மழை பொழிந்து
என் நிகழ்ச்சிக்கு உயிர் கொடுக்கும்
அன்பு உள்ளங்கள் நீங்கள்
குயில் பாடும் ராகத்தை
உயிரோடு உறவாடும் கவிதைகள்
இசையில் கலந்து ரீங்காரமாய்
உங்கள் மனதை தாலாட்டிச் செல்லட்டும்
இந்த குயில் பாடும் கீதம்
குயிலே கவிக்குயிலே யார் வரவை
இன்னமும் கவிதையில் தொலைந்த நாட்களை
எண்ணிக்கொண்டு இருக்கும் போது உன்னை
சந்தித்தேன் அந்த நாட்கள் தான் என்னை
நம்பிக்கையின் உருவத்தை எட்டிபிடிக்க வைத்தது
மாளிகையில் இருந்திருந்த நான் உனது குடிசையில்
வாழும் என் மனது தான் ஜில்லென்கின்றது
என்னத்தில் ஏதோ ஜில்லென்றது
கனவுகளில் ஆனந்தம் கொண்ட பூமியில்
இதமாக வரும் கவிதைகளை தொடுப்பதற்க்கு
என்னைவிட என் பேனா முந்திக்கொள்கின்றது
எத்தனை தூது விட்டேன் பதில் கொண்டு வருவதற்க்குள்
தென்றலில் சிக்கித்தவித்தது புறா
தூது விடுகின்றேன் இந்த காற்றலையில்
எஸ்.ஜானகி ஊடாக
கனவுகளே உன் கோலம் எங்கே
நாணிப்பாய் அந்தோனி மாதாவே
நான் பார்வையற்றவள் இருந்தும்
உனது கருணை மழையில் எனது
விழிகளை காண்கின்றேன் உனது
மணி ஓசையில் எனது
செவி புலன்களை அறிகின்றேன்
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
துளிர் விடும் இளவேனிற் காலத்தில்
மலர்கள் பூக்க ஆரம்பிக்கும் போது
உனது காலத்தை அறிந்தேன்
பட்டுப்போன மரத்தின் வேர்கள்
மண்ணில் கரைந்து போக
நிலையற்ற மனிதர்கள் நடுவில்
திக்கு முக்காடும் பெண்களிடம்
எங்கே வசந்தகாலம்
வசந்தகால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
என்னையும் என் இதயத்தையும் அறிந்து வழி நடத்த
இனி ஒரு ஜீவன் பிறந்து வரவேண்டும் இப்புவிக்கு
அதற்கிடையில் நான் வின்னுலகம் சென்று விடுவேன்
என்னையும் என் இதயத்தையும் அறிந்து வழி நடத்த
இனி ஒரு ஜீவன் பிறந்து வரவேண்டும் இப்புவிக்கு
அதற்கிடையில் நான் வின்னுலகம் சென்று விடுவேன்
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
பாடல் பாட காதல் என்பது அப்போது
No comments:
Post a Comment