Thursday, December 20, 2007

தூரத்தில் நான் கண்டஜானகியம்மா பாடிய ஓர் அசத்தலான பாடல் நிழல்கள் படத்தில் வருகிறது. இந்த பாடலை நான் படம் பார்த்த போது கேட்டது அதற்கு பிறகு இப்போது தான் கேட்கிறேன். எனது தோழர் திரு.பாலா அவர்கள் விரும்பி கேட்டுகொண்டதின் பேரில் இந்த பாடலை பதிந்துள்ளேன். இது போல் நிறைய பாடல்கள் ஜானகியம்மா அவர்கள் பாடியுள்ளார். சுரங்கம் போல் தோண்ட தோண்ட வெளிவரும் அழகான பாடல்கள் நான் எப்போ கேட்பது? எப்போது பதிவது? நினைத்தாலே தலயை சுத்துது. பாடல் வரிகளை தட்டச்சு செய்வதற்குள் தாவு கழண்டு விட்டது. மிகவும் இனிமையான பாடல் கோப்பை வழங்கிய பாலா அவர்களுக்கு அம்மா ரசிகர்கள் சார்பில் நன்றி.

படம்: நிழல்கள்
பாடியவர்: ஜானகியம்மா
இசை: ராசய்யா
பாடலாசிரியர்: வாலி

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

வேங்குழல் நாதமும் கீதமும் ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வேங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் எங்கும் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் என்னும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா...
மீரா...மீரா...மீரா...மீரா...மீரா..
வேளை வரும்போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்

இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளூம் என்னை ஆளூம் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைனவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் அறிந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்


Get this widget | Track details | eSnips Social DNA


SONG : dhooraththil naan kaNda unn mugam
FILM : nizhalgaL
SINGER : S.Janaki
MD : IR
LYRICS :Vaali

Aaaaaaaa..aaaaaaaaa….aaaaaaaaa.aaaaaaa
dhooraththil naan kaNda unn mugam
nadhi dheeraththil thEn koNda yen manam(dhooraththil)
sugam nooraagum kaaviyamE..
oru sOgaththin aarambamE…
idhu unnai yeNNi paadum raagam..(dhooraththil)

vEinguzhal naadhamum geedhamum..aaaaaaa..aaaaaaaa.
aaaaa…aaaaaaaaa…aaaaaaaaa (vEinguzhal)
maiyalin yEkkamum dhaabamum
maayan unadhu leelai idhuvE..
aiyan unn thanjam yen nenjamE…
dhinam azhaithEn… prabhu unaiyE..
aadum kaatrilE… pudhu raagam thOndrumaa..(dhooraththil)

kaadhal yenum geedham paadi
urugum oru pEdhaiyaana meera..
(Meera… meera… meera... meera)
vELai varum bOdhu vandhu… kaakkum karam kaakkum yendru
veeNai meettum dhEvi uLLamE
theeraadha aasaiyOdu.. vaadaadha pookkaLOdu..
kaalai maalai poojai seidhu sErkkavillaiyaa
kanavu pOla vaazhivil yendhan
laala laala laala laala...
kavalai yaavum maara vENdum (kanavu)
irakkamum karuNaiyum unakkillaiyO
naaLum yenai aaLum thuNai neeyE yena vaazhndhEn
maravEn maravEn maravEn
unn ninaivugaL yennidam dhinam
uravin perumai maravEn
varum vizhi tharum adhil
uravugaL therivadhum oru sugam
vaanamum mEgamum pOlavE...
vaanamum mEgamum pOIavE
neendhiya kaalangaL aayiram
mEgam maraindha vaanin thanimai
indru naan kaNdadhum uNmaiyE..
dhinam azhaithEn.. prabhu unaiyE..
aadum kaatrilE.. pudhu raagam thOndrumaa… (dhooraththil)

1 comment:

ஹரன்பிரசன்னா said...

இந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை. இதே பாடலை கன்னடத்திலோ தெலுங்கிலோ ஜானகி பாட, அப்பாடல் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது.