Monday, October 22, 2007

கருத்த மச்சான் கஞ்சத்தனம்



புது நெல்லு புது நாத்து படம் எல்லோரும் பார்த்து இருப்பீங்க. சுகன்யாவின் நடிப்பு நன்றாக இருக்கும். இதோ ஜானகியம்ம அவங்களூக்காக ஒரு கலக்கல் பாட்டு இது. கருத்த மச்சான் பாடல் கேட்டு மகிழுங்கள்.


படம்: புது நெல்லு புது நாத்து
பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகியம்மா
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா
நடிகர்கள்: நெப்போலியன், சுகன்யா

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பாஆஆ
பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பாஆஆ
பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

கூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டு கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ளே மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத்திற மாமா
பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு
உன் மார்பில் சாயாம தூங்காத கண்ணு
என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பாஆஆ
பிப்பீ டும் டும் டும்
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

முளைச்சு இங்கே மூணு இலை விட்டவளும் நானே
என்ன கருக வைச்சு பார்க்குறயே காஞ்ச நிலம் போல
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டிப் போல
எப்போதும் உன் நேசம் மாறாது என் வாசம்
என் சேலை மாராப்பு நீ தானே ராசா
என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பாஆஆ
பிப்பீ டும் டும் டும்
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

ஸ்ரீசரண் said...

“ஏஞ்சேல மாராப்பு நீதானே ராசா”

இந்த வரியில் “ஏஞ்சேல” ன்னு உச்சரிப்புக்காகவே நிறைய முறை கேட்டுருக்கேன்

நன்றி ரவி