மேடையில் மஞ்சுபார்கவி நடனமாட, சமையற்கட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாக சமையல் வேலைகளைச் செய்துகொண்டே அதே சமயத்தில் உயிரை விட நேசிக்கும் பரத நாட்டியத்தை அவ்வப்போது பார்த்துக்கொண்டு கையில் கரண்டிகளுடன் அதே அபிநயத்தைப் பிடித்து கமல் நடனமாட, மஞ்சுபார்கவியைப் போன்று தன் மகனும் மேடையேறி ஆடினால் எப்படி இருக்கும் என்று தாய் மனக்கண்ணில் கமல் மேடையில் ஆடுவதைப் போன்று கற்பனையில் ஆழ, அடையாளம் தெரியாது இருக்கும் அந்தக் கலைஞனை வெளிச்சத்திற்குக் கொண்டுவர அயராது முயலும் ஜெயப்ரதா கமல் நடனமாடுவதைப் புகைப்படம் எடுக்க - அந்த ஒரு பாடல் காட்சி ஆயுசுக்கும் போதும் என்று சொல்ல வைத்துவிடும்.
சலங்கை ஒலி மாதிரி ஒரு படம் மறுபடியும் வருமா என்று சந்தேகமாக இருக்கிறது. கமலுக்கு அந்தப் படம் ஒரு மைல் கல் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விட முடியாதபடி அப்படம் உருவாக உழைத்த அனைவருக்கும் அது ஒரு அற்புதக் குழந்தை.
வெட்டூர் சுந்தரராமமூர்த்தியின் பாடல் வரிகளில் ஜானகி அந்தப் பாடலை அற்புதமாகப் பாடியிருப்பார். பொருள் புரியாவிட்டாலும் மயங்க வைக்கும் இசையிலும் குரலிலும் நாள்பூரா கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும் பாடல் இது.
பால கனகமய சேல சுஜன பரிபால கனகமய சேல சுஜன பரிபால கனகமய சேல சுஜன பரிபால ஸ்ரீ ரமா லோல வித்ருத ஷரஜால ஷுபதா கருணாலவால கண நீல நவ்ய வன மாலிகா பரண ஏ லா நீ தயராது பராகு ஜேஸே வேலா ஸமயமு காது
2 comments:
அருமையான பாடல் தந்தமைக்கு நன்றி.
hi sunder, nice song selection. This is also a beautiful classical by her. All the best.
Post a Comment