
ஜானகியம்மாவின் மென்மையான குரலில் சில பாடல்கள் நம்மை கேட்காமலே நம் மனக்கதவை தட்டாமலே மெல்ல திறந்து ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டு அழிச்சாட்டம் செய்யும் அந்த வகையில் இந்த பாடல் "ஊருசனம்" மெல்ல திறந்து கதவு என்ற படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் மேஸ்ட்ரோ ராசய்யா கூட்டு முயற்சியில் வந்த பாடல் தான் இது. இந்த படத்தில் எல்லா பாடல்களூம் போட்டி போட்டுக்கொண்டு நம்மை இசைதர்பாரின் சிம்மாசனத்தில் கொண்டு சேர்த்து அமரவைக்கும் இனிமையான பாடல்களை கொண்ட தேவாமிர்தபடம். எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடலிது. கேட்டு மகிழ்ச்சியாயிருங்கள்.
பாடல்: ஊருசனம் தூங்கிருச்சு
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி & மேஸ்ட்ரோ இளையராஜா
நடிகர்கள்: மைக் மோகன், அம்லா, ராதா
ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு
கோலம் பாடும் பாட்டாலே
மயிலு இளம் மயிலு
மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
உன்னை என்னி நானே
உள்ளம் வாடி போனேன்
கன்னி பொண்ணு நானே
என் மாமனேஏஏஏ என் மாமனே
ஒத்தயில அத்தமக
உன்ன நினைச்சு ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலயே
கால நேரம் கூடலியே
ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
மாமன் உதடு பட்டு
நாதம் தரும் குழலு
நானா மாற கூடாதா ஆஆஆஆ
நாளும் தவம் இருந்து
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வராதா ஆஆ
மாமன் காதில் ஏறாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுகுள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரம் தான்
இந்த நேரம் தான்....
ஒன்ன என்னி பொட்டு வச்சேன்
ஒலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்கும் ஏங்க வச்சான்
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
4 comments:
romba naalaa kettutirunden inda paadaluukaga,inda paadalai kuduthadarku nanri.nice melodious song by S.Janaki madam.
உஷா மேடம், இது உங்கள் விரூப்பம் தான் கோப்பு இப்போது தான் கிடைத்தது. வருகைக்கு நன்றி.
//உன்னை என்னி நானே//
திருத்தம் பிளீஸ் ;))
அருமையான பாட்டு, நான் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பும் பாட்டும் கூட. இங்கே ஆஸ்திரேலியாவில் இருக்கும் தமிழ் நண்பர் ஒருவர், வெள்ளைக்காரப் பெண்மணியை மணம் முடித்திருந்தார். அந்தப் பொண்ணு எப்படியோ இந்தப்பாட்டின் ஆரம்ப வரிகளைப் பாடமாக்கி அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.
Dear Mr. Ravi,
Thanks a lot
anpudan grace
Post a Comment