
செவாலியே சிவாஜி கனேசன் சாரைப் பற்றி அதிகம் விவரிக்க தேவையில்லை. நடிப்பில் அவர் ஒரு இமயம். மேலும் நடிகை ரேவதி நடித்த லக்ஷ்மி வந்தாச்சு என்ற இந்த படத்தில் இந்த அழகான பாடலை ஜானகியம்மா அருமையாக பாடியிருப்பார்கள். சரணத்தில் //பூமியெங்கும் பூ வசந்தம்.. நீ சிரித்தால் தேன் சுரக்கும்.. எங்கும் இளமை விருந்தாய் இருந்தாய்.. காவிரி சோலை நீ தரும் வேளை.. தேனும் பாலும் சூழல் போடும்// இந்த வரிகளீல் அவரின் குரல் அமிர்தமாக இருக்கும். இந்த படத்தின் மேலும் தகவல்களை தெரிவிக்கலாம்.
படம்: லக்ஷ்மி வந்தாச்சு
நடிகர்கள்: நடிகர் திலகம் சிவாஜி, ரேவதி
பாடியவர்: எஸ்.ஜானகி
காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது
காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது
பூமியெங்கும் பூ வசந்தம்
நீ சிரித்தால் தேன் சுரக்கும்
எங்கும் இளமை விருந்தாய் இருந்தாய்
காவிரி சோலை நீ தரும் வேளை
தேனும் பாலும் சூழல் போடும்
காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது
நான் படிக்கும் பா ஸ்வரங்கள்
உன்னடிக்கும் பூச்சரங்கள்
நந்தவனத்தில் மனத்தால் நினைத்தால்
பூங்கொடியோடு நீ விளையாடு
புள்ளி எல்லாம் கோலம் ஆகும்
காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது
காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது
4 comments:
i am regularly following this blog and enjoying the songs in it.
but i cant understand tamil, please wrtite tha in english, if possible. however i enjoy all the songs of janaki amma, thanks a lot for the blog.
vinay Kumar,
SJanaki@yahoogroups.com
Hai Vinayak Sir,
Sure we will try to post tamil lyrics alongwith english also. Thanks for ur regular visit. More and More songs will come here. Enjoy your self.
ரவி, இந்தச் சுட்டியை இவ்வளவு தாமதமாகவாத் தருவது. நாமெல்லாம் இசையன்பர்கள். இசை நமக்கு இசைவானது.
எஸ்.ஜானகி அவர்களின் குரலின் குழைவு நிறைந்து வரும் பாடல்களில் இதுவும் ஒன்று. செந்தூரப்பூவே பாட்டு இதே ரகந்தான். அழகிய கண்ணே இதே ரகந்தான். இந்தப் பாட்டை மிகவும் ரசித்தேன்.
ஒரு உதவி செய்ய முடியுமா? இந்தப் பாட்ட எனக்கு மெயிலில் அனுப்ப முடியுமா?
ராகவன் சார்,
வாங்க வாங்க தாமதமாக சுட்டி அனுப்பியதற்கு மன்னிக்கவும். மேலும் அம்மாவின் தளம் எப்போதோ ஆரம்பிக்கவேண்டியது. தாமதமாக தான் ஆரம்பித்தேன் அவர் ரசிகர் குழுவின் ரசிக நண்பர்கள் என்னை கேட்டுகொண்டதின் பேரிலும், அம்மாவின் பாடல்கள் என்னை அதிகம் பாதித்திருக்கிறது. அதனால் அவருடைய பாடல்கள் அதிகம் ஒலிபரப்பாத பிரபலமான பாடல் கள் பதியபப்படும். தாங்களும் உதவி செய்யலாமே? மேலும் நீங்க கேட்ட பாடல் கோப்பு உங்கள் முகவரிக்கு அனுப்பிவிட்டேன். மேலும் உங்களுக்கு எந்த பாடல் வேண்டுமென்றாலும் யார் பாடினாலும் கேளுங்கள் இங்கே வாங்கியாவது உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க சார் தங்களைப்போல இசை நண்பர்கள் தகவல்கள் அதிகம் இங்கே இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் ஆசை.
கோவை ரவீ
Post a Comment