
இதோ அதிகம் கேட்கமுடியாத இந்தபாடல் ஜானகியம்மா, பாலுஜி இருவரும் பாடியிருக்கிறார்கள். எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. இந்த பாடலை கேளூங்கள் உங்களையும் அறியாமல் உங்கள் உதடுகள் வேறு ஒரு வரிகளை பாடும் அது போல மெட்டு கொண்ட பாடல். அந்த பாடலின் வரிகள் வருவதை உங்கள் உதடுகள் முனுமுனுப்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆமாம், சின்னக்குயில் சித்ரா, மனோ பாடிய பாடல் தான் அது. தெரியாதவர்களூக்காக அந்தபாட்டின் வரிகளை "மதுர மரிக்கொழுந்து வாசம்" எழுதுகிறேன். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் அந்த சின்னகுயில் சித்ரா மேடம் அழகாக பாடியிருப்பார்கள். இந்த பாடலில் இனிமையாக ஜானகியம்மாவும் கலக்கியிருப்பார்கள்.
போட்டோ: நன்றி www.spbala.com
படம்: காதல் தேவதை (மொழி மாற்றம் படம்)
நடிகர்: சிரஞ்சீவி, ஸ்ரீதேவி
உடனடி படத்தகவல் : நன்றி திரு.எஸ்.பாலா(www.prodigyhub.org)
குறிப்பு: கோப்பின் தரம் சிறிது குறைவாக இருக்கும் மன்னிக்கவும். தயவு செய்து ஒலியின் அளவை தாங்கள் விரும்பியபடி அதிகரித்துகொள்ளவும்.
நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்
நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்
ஊறும் பூந்தேனும் அமுதம் தான் வாடி
பொன்வண்டும் நாடும் மொய்க்காது பாடி
அடியாத்தி உண்டாகும் உன் காயம்
நல்ல புரிஞ்சாட்டி பொன்வண்டின் மாயம்
நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்
நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்
அங்கெங்கே நீ தொடும் என்ன
நான் தொடும் மெல்ல கையைக்கட்டி
கொஞ்சுதான் சின்னச் குட்டி
வெள்ளியிலான வெத்தலைப்பெட்டி
என்னை நீ தாலிகட்டி
மத்தளம் கொட்டி
போடனும் மெட்டி
உன்னை நான் மெல்லக்கட்டி
அள்ளற பொன்னு வெல்லக்கட்டி
சின்ன சின்ன தீபமிட்டு
நானும் மெல்ல மெத்தையிட்டு
நெஞ்சு நிறைய ஆசைப்பட்டு
சேரும் சேரும் தூக்கம் விட்டு
மின்னும் பொன்னா வஞ்சி நின்னாச்சு
கைப்பட்டதால கூச்சம் விட்டாச்சு
வண்டத்தான் கூத்தக்குயம்மா
தொட்டு முத்தாட சந்தோசமம்மா
அடி கைத்தொடவும் கண் படவும்
பாட்டு சொன்ன மாமன் இதோ
நமக்குள்
ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்
நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்
பட்டு மெத்தை வாங்கி வச்சி
பாலு வச்சி பழமும் வச்சி
பக்கம் இந்த பூவும் கொஞ்ச
மெல்ல மெல்ல கூடும் நெஞ்ச
நீயும் உன் வெட்கம் விட்டு
தோளைக்கட்டி அழகா தொட்டு
போதையில் துள்ளூம் மெட்டு
பருவக்கதை பேசுமடி
சேலை ஒன்னு கட்டும் பெண்ணு
ஹஹ எங்கும் இந்த கன்னிப்பொன்னு
ஆசையுடன் ஒட்டிக்கட்டி
யவ்வனத்தை பாடுமடி
உன்னப்பார்த்து வந்தேன் இங்கு மாமா நான்
கொஞ்சும் அதை கண்டேன் இங்கு மாமா
ரட்சிக்க தன்ணியத்தான் கூட
தினம் கட்டிலிலே பொங்கி எங்கு ஓட
அத நீ சொல்லவா நான் சொல்லவா
ஆசை என்னை அசைத்திடுதோ
நமக்குள்
ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்
நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்
ஊறும் பூந்தேனும் அமுதம் தான் வாடி
பொன்வண்டும் நாடும் மொய்க்காது பாடி
அடியாத்தி உண்டாகும் உன் காயம்
நல்ல புரிஞ்சாட்டி பொன்வண்டின் மாயம்
நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
2 comments:
hi Ravi sir, nice song from dubbed film of Jagadeka Veerudu Athiloka Sundari. It Was sung by S.P.B and S.Janaki in telugu also.anyway we r enjoying this song. Thanx for this song.
Thx for ur speedy comment mam.
Post a Comment