
தளபதி படம் ரஜினிக்கு ஒரு மிகப் பெரிய திருப்பு முனை. அகண்ட திரையில் கருப்பு வெள்ளையில் துவங்கி ரயிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை வளர்ந்து வண்ணத்திரையில் பெரியவனாகி பின்பு... அது ஒரு நீண்ட கவிதையான படம். தேவாவாக மம்மூட்டியும், சூர்யாவாக ரஜினியும் - திரையில் காட்டப்பட்ட அந்த நட்பின் ஆழம் இன்னும் நினைவில் நிழலாடுகிறது. இறுதிக் காட்சிகளில் படத்தை முடிப்பதில் ஏகமாகத் தடுமாறியிருப்பார்கள. படம் முழுவதும் மணிரத்னத்திற்காக ரஜினியும் இறுதிக் காட்சிகளில் ரஜினிக்காக மணிரத்னமும் சமரசங்கள் செய்துகொண்டதாகத் தோன்றியிருக்கின்றது எனக்கு.
இசைஞானி இளையராஜா அவரது உச்சக்கட்டத் திறமையைப் பயன்படுத்தி இந்தப் படத்திற்காகப் பின்னணி இசையும் பாடல்களும் அமைத்திருப்பார் போல. அட்டகாசமான பாடல்கள். ராக்கம்மா கையத்தட்டு இன்றும் தாளம் போடவைக்கும். பாலு பல பாடல்களில் பின்னி எடுத்திருப்பார். அவரே பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு புளகாங்கிதமடைந்த பாடல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல். படத்தில் வராத ஒரு அற்புத பாட்டொன்று இருக்கிறது. 'புத்தம் புது பூ பூத்ததோ' என்று ஜேசுதாஸ் ஜானகி பாடியிருக்கும் பாடல் நரம்புகளைச் சுண்டக்கூடிய இசையுடன் அருமையான பாடல். படத்தின் நீளம் கருதி இப்பாடலைச் சேர்க்காது போனார்களோ என்னவோ.
ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடல் கேட்கும்போதே அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு போகும். அப்படியே நம்மை நெகிழச் செய்துவிடும். இதே பாடலை ரஜினி அம்மா ஸ்ரீவித்யாவை கோவிலில் முதன்முதலாகப் பார்க்கும்போதும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும் இந்தப் பாடலில் ஜானகி எப்படி உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் கேளுங்கள்.
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
Friday, September 7, 2007
சின்னத் தாயவள்
Posted by
Sundararajan Padmanaban
at
11:25 AM
Labels: SJ, thalapathy, ஜானகி, தளபதி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எபப்டி ரெஸ்பான்ஸ் வருமோ என்று பயந்தேன் நீங்க வந்துடீங்க தானே நம்மாள முடிந்தவரை கலக்கிருவோம்.
Dear Anna,
This is one of my fav song of janki amma. great song & good job. all the best anna,
zakaas4u
Post a Comment