Friday, September 7, 2007

சிங்கார வேலனே தேவாஇசைக்குயில் ஜானகியம்மா ரசிகர்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கம். நான் ஜானகியம்மா யாகூ ரசிகர் குழுவில் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகின்றன. அவரின் ரசிகர்களூக்காக அவர் பாடிய பாடல்களை தேர்ந்தெடுத்து என்னை மிகவும் கவர்ந்த பாடல்கள் தரவேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு. இந்த தளம் இணைய நண்பர்களூக்காக
ஏற்படுத்தப்பட்ட தளம் இணைய தளத்தில் பல ஆன்லைன் தளங்கள் இருந்தாலும் இவை உங்களூக்கு வித்தியாசம இருக்கும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே திரு.சரண் ஓர் தளம் ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மாவின் பாடல்களை நான் வழங்கும் பாடல்கள் எல்லோரும் பல தடவை கேட்டிருப்பீர்கள் பாடல்களும் வைத்துருப்பீர்கள். இருந்தாலும் அவர் இந்த இசை உலகத்திற்கு தன் இனிய குரலால் வழங்கிய அமிர்தமான பாடல்களை திரும்பவும் தங்களூக்கு வழங்குவதில் பெருமையடைகின்றேன்.

அம்மா அவர்கள் பலருடன் பாடிய காதல் பாடல்கள், தனிமை பாடல்கள், பக்திப்பாடல்கள் யாவற்றையும் ஒவ்வொன்றாக வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களில் பலபேர் வேண்டுகோளுக்கிணங்கவும், என் நண்பர்களூக்காகவும் இந்த பதிவை தொடங்கியுள்ளேன்.
இன்று முதல் பதிவு ஆகையால் ஓர் கடவுள் பாடல் கேட்கலாம்.

என் இஷ்டதெய்வமான முருக கடவுள் மீது அவர் பாடிய ஓர் பாடல். இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் என் உடலில் ஓர் வித இனம் புரியாத புத்துணர்ச்சி தோன்றி மெய்சிலிர்க்க வைக்கும். என்ன காரணம் என்று தெரியவில்லை தன் இனிய குரலால் பாடிய ஜானகியம்மாவின் குரலை சொல்லவதா?, இசையமைப்பை பற்றி சொல்வதா? நாதஸ்வரமும், தவிலின் இசையுடன், அம்ம்பாவின் குரலும் பாடலில் ஒவ்வொன்றும் போட்டி போட்டி என் மனதை கொள்ளைக்கொண்டுபோயின. யாரைத்தான் அடிமையாக்கவில்லை இந்தபாடல்.
நாம் எத்தனை தடவை கேட்டாலும் சிறிதும் சலிக்கவைக்காத பாடல் இது. இந்த தளத்தின் முதல் பாடலாக வருகிறது கொஞ்சும் சலங்கை படத்தில் வரும் இந்த பாடலுகு நடித்த நடிகர் ஜெமினி கனேசனும், சாவித்திரியும் பாடலில் ஒன்றிப்போய் நம்மையும் நடிக்கவைத்திருப்பார்கள். எனக்காக இந்த பாடலை மறுமுறை கேளுங்கள்.

முதல் தடவையாக இந்த பாடலை பாடிய ஜானகியம்மா அவர்களூக்கும், எனது நண்பர்கள் திரு. எஸ்.பாலு, திரூ. ஜி. தாசரதி, திரு.ராதகிருஷ்னன், திரு.ஸ்ரீகாந்த், திரு.பெஞ்சமின் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கின்றேன். போட்டோ அனுப்பிவைத்த தாசரதி சாருக்கு நன்றி.

மேலும் இந்த ஒலிக்கோப்பின் தரம் சிறிது குறைவாக இருந்தாலும் கேட்பதற்க்கு இனிமையாக இருக்கும். பாடல் நடுவில் வரும் ஸ்வரங்கள், ஜதிகள் மற்றும் ஆலாபனைகள் தவறாக எழுதிவிடக்கூடாது என்ற ஆசையில் பாடலில் துவக்கத்தில் வரும் வசணத்தை மட்டும் எழுதியுள்ளேன். பாடலின் நாதஸ்வர இசையும், தவில் இசையும் இனிமையும் கேட்பவருக்கு இடைஞ்சலாக இருக்ககூடாது என்ற என்னத்தினாலும் பாடல் வரிகளை தவிர்த்துவிட்டேன். இனிவரும் பாடல்களில் பாடல் வரிகள் பதிய முயற்சி செய்கின்றேன். பாடலை கேட்டு குறைகளை தயங்காமல் இந்த பதிவில் கீழ் வரும் பெட்டியில் வழங்கினால் நான் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். இந்த பாடலின் பதிவின் போது அறிய தகவல்கள் தங்களூக்கு தெரிந்திருக்கும் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளாலாம் பாடலை கேளூங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

குறிப்பு: இது தமிழ் ப்ளாக் தமிழ் ஜானகி இணைய தள ரசிகர்களூக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலத்திலும் அவ்வப்போது வரும். ஆகையால் யாரும் வருத்தப்படக்கூடாது. தமிழில் எழுதினால் நான் ரசித்ததை அப்படியே எழுத முடியும் என்ற நம்பிக்கை. இதில் வேறு எந்தவித காரணமும் இல்லை. ஆகையால் உங்கள் ஆசிர்வாதத்தை தாருங்கள்.

இந்த பாடலைப்பற்றி விட்டுப்போன அறிய பல தகவல்கள் இணையதள நண்பர்கள் பகிந்துள்ளார்கள் சுட்டியை தட்டி பார்க்கவும். இந்த தளத்தின் பதிவாளருக்கு நன்றி.

http://muruganarul.blogspot.com/2007/01/blog-post_13.html

படம்: கொஞ்சும் சலங்கை
நடிகர்: திரூ.ஜெமினி கனேசன், சாவித்திரி
பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகி
இசை: திரு. எஸ்.வி.சுப்பையா நாயுடு
நாதஸ்வரம்: திரு,காரைக்குறிச்சி அருனாசலம்


சாந்தா உட்கார்
ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்க்கு ஓடோடி வந்த என்னை
ஏமாற்றிவிடாதே சாந்தா.

என்னங்க, உங்கள் நாதஸ்வரத்திற்கு முன்னாள்

தேனோடு கலந்த தென்னமுதம்,
கோலநிலவோடு சேர்ந்த குளிர்தென்றல்,
இந்த சிங்கார வேலன் சந்நிதியில்
நமது சங்கீத அருவிகள் ஒன்று சேரட்டும்
பாடு சாந்தா பாடு.

சிங்கார வேலனே தேவா

Get this widget | Share | Track details

11 comments:

usha said...

Hi, Ravi sir,

first song enn guess correct aaga irundadu. Nice song selection in this blog as first song. Congradulations for starting a new blog for S.Janaki mam. May God bless u for the work u have to do in future. Ur songs are always nice and we r here to help u always.

Covai Ravee said...

வாங்க உஷா மேடம்,

தங்களின் முதல் வருகை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. வருகைக்கு மிக்க நன்றி. என்னால் முடிந்தவரை நல்ல பாடல்கள் தர முயற்ச்சிக்கிறேன். இந்த பாடலைப்பற்றி மேலும் தகவல்கள் இந்த சுட்டியில் உள்ளன பார்த்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

http://muruganarul.blogspot.com/2007/01/blog-post_13.html

வருகைக்கு நன்றி.

வற்றாயிருப்பு சுந்தர் said...

ரவீ

மனமார்ந்த வாழ்த்துகள் - இந்தப் பதிவைத் துவங்கியதற்கு.

ஜானகியம்மாவோட எத்தனையோ பாடல்கள் எனக்கு உயிர் மாதிரி.

வரேன் வரேன். ராகவன் அங்கிட்டு 'இசையரசி' நடத்திக்கிட்டு இருக்கார். நீங்க 'இசைக் குயில்' ஆரம்பிச்சிருக்கீங்க.

மாபெரும் கலைஞர்களுக்கு அவர்கள் வாழும் காலத்திலேயே மரியாதை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாகக் கருதுகிறேன். நன்றி.

Covai Ravee said...

வாங்க வாஙக சுந்தர் சார், புல்லரிக்க வச்சுட்டீங்க தலைவா. ஜானகியம்மா குழுவில் அதிகம் பேர் இதுபோல் தளம் பார்க்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். நமது தலைவரை அறிமுகப்படுத்தியவங்கலாயிற்றே ஜானகியம்மாவிற்க்கு மரியாதை செய்வது நமது தலவருக்கு மரியாதை செய்வது போல் ஒரு மகிழ்ச்சி. துவக்கத்திலேயே அருமையான 2 பாடல்கள் தந்து என்னை ஆச்சரியப்படுத்தி விட்டீர்கள். என் நன்றியை எப்படிசொல்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அப்படி!! நான் பாரிஸ் தமிழ் வானொலிக்கு; "இன்றைய நேயர்" நிகழ்ச்சிக்கு எழுதிய பல
பாடல்களின் முதல் பாடலாகத் தெரிவு செய்த "கொஞ்சும் சலங்கை"..படத்தில் இடம் பெற்ற
"சிங்கார வேலனே தேவா" என்ற பாடலைக் கேட்டு...விமர்சனத்தைப் படிக்கவும்.

**நிகழ்ச்சியின் இறைவணக்கமாகவும்; மங்கல இசையாகவும் இப்பாடலைத் தெரிவு செய்துள்ளேன்.
எனது மாத்திரமல்ல ;பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் செவிகளில் ரீங்காரமிடும்;இந்த ஜானகி அம்மாவும்;காரைக் குருச்சியாரும் என்னால் மறக்கமுடியாதவர்கள்.
நாதஸ்வரம் தமிழர்களின் இசைச் செழுமையின் பிரதிபலிப்பு.எவர் மனதையும் கவரக் கூடியது.
அதிலும் காரைக்குருச்சி அருணாசலம் அவர்கள் இத்துறையில் இறைகடாட்சம் பெற்றவரென்பது என்கருத்துமாத்திரமல்ல; இசை உணர்ந்தோர் கருத்தும் கூட...
இப்பாடலில் ஜானகி அம்மாவின் குரல் நளினங்களுக்கு;அவர் விரல் ஈடு கொடுத்துள்ள லாவகம்
இசைப் பிரியர்களால் மறக்க முடியாதது.
காரக்குருச்சியாரின் அட்சரசுத்தி பிசகாத வாசிப்பு என்னை இன்றும் இப்பாடலுக்கு மயங்க வைத்துள்ளது.
ஜானகி அம்மாவின் குரலும் இப்பாடலுக்கு காத்திரமான ஒரு நளினத்தைக் கொடுத்துள்ளது.
எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத ;என் இஸ்ட தெய்வம் சிங்கார வேலன் புகழ் பாடும் இப்பாடலை ஒலிபரப்பவும்.
இப்பாடலை இசைத்தட்டாக உருவாக்கியோரும் நல்லதமிழ் ரசிகர் போலும்;அருமையான வசனத்தை முதலில் சேர்த்து ;இப்படலின் சிறப்புக்கும் வெற்றிக்கும் கைகொடுத்துள்ளார்கள்.ஒலிபரப்புவீர்களா??
என்னை மகிழ்விற்பீர்களா??

எனக்குப் பிடித்த ""சிங்கார வேலனே தேவா"

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.
http://johan-paris.blogspot.com/2007/03/blog-post_3318.html
இப்பாடல் பற்றி யான் இட்ட பதிவில் எழுதியவை.
என்றும் எனக்குப் பிடித்த பாடல்

பாலராஜன்கீதா said...

உங்களுக்கு எங்களின் உளம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.

மட்டுறுத்தல் இருக்கும்போது இந்த வார்த்தை சரிபார்த்தல் தேவையா ? இயன்றால் வார்த்தை சரிபார்த்தலை நீக்கிவிடுங்களேன். :-)

பாலராஜன்கீதா said...

நேயர்களின் விருப்பங்களும் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்.

Covai Ravee said...
This comment has been removed by the author.
Covai Ravee said...

வருகைக்கு மிக்க நன்றி திரு.யோகன் அவர்களே. என்னுடைய பதிவு தாமதமா வந்திருச்சு. நீங்கள் எல்லோரும் இணையத்தில் பழம் சாப்பிட்டு கொட்டை போட்டவர்கள் நான் சிறியவன். உங்கள் தளம் அருமை. அம்மாவின் ரசிகர்கள் மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அடிக்கடி வாங்க.


பாலராஜன் கீதா அவர்களே, முதல் தடவையாக வந்ததற்க்கு மிக்க நன்றி.

//நேயர்களின் விருப்பங்களும் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்//

நேயர் விருப்பம் தானே? போட்ருல்லாம்.

sri said...

hi ravee sir,

ingeyum vanthutenya vanthuten.
muthala padale super. kandipaga
neengal nalla padalgala thaan
tharuveergal endru nambugiren.
janaki amma pala kuralgalil padi
ullar. appadi yengum kidaikatha
padalgali thedi pathivu seiyavum.

thangal nanbargal vattathil serthulla srikanth naan endral
enakku mikka magilchi.

nandri, thangal sevai thodarattum.

srikanth

Covai Ravee said...

ஸ்ரீகாந்த் சார்,

///thangal nanbargal vattathil serthulla srikanth naan endral
enakku mikka magilchi.//

ஜானகியம்மா குழுவில் சேலத்தில் ஒருத்தர் இருக்கிறார் அவர் கல்லூரியில் படித்துக்கொண்டுள்ளார். உங்களை சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளலாம் ஒன்றும் தப்பில்லை. மின்னஞ்சல் கூட நீங்கதான் அனுப்பியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

//janaki amma pala kuralgalil padi
ullar. appadi yengum kidaikatha
padalgali thedi pathivu seiyavum.//

அறிய பழைய பாடல்களை தேடி பிடிச்சு போட்ருலாம் கவலைபடாதீங்க சார். அடிக்கடி வாங்க.