Thursday, December 20, 2007

தூரத்தில் நான் கண்டஜானகியம்மா பாடிய ஓர் அசத்தலான பாடல் நிழல்கள் படத்தில் வருகிறது. இந்த பாடலை நான் படம் பார்த்த போது கேட்டது அதற்கு பிறகு இப்போது தான் கேட்கிறேன். எனது தோழர் திரு.பாலா அவர்கள் விரும்பி கேட்டுகொண்டதின் பேரில் இந்த பாடலை பதிந்துள்ளேன். இது போல் நிறைய பாடல்கள் ஜானகியம்மா அவர்கள் பாடியுள்ளார். சுரங்கம் போல் தோண்ட தோண்ட வெளிவரும் அழகான பாடல்கள் நான் எப்போ கேட்பது? எப்போது பதிவது? நினைத்தாலே தலயை சுத்துது. பாடல் வரிகளை தட்டச்சு செய்வதற்குள் தாவு கழண்டு விட்டது. மிகவும் இனிமையான பாடல் கோப்பை வழங்கிய பாலா அவர்களுக்கு அம்மா ரசிகர்கள் சார்பில் நன்றி.

படம்: நிழல்கள்
பாடியவர்: ஜானகியம்மா
இசை: ராசய்யா
பாடலாசிரியர்: வாலி

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

வேங்குழல் நாதமும் கீதமும் ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வேங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் எங்கும் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் என்னும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா...
மீரா...மீரா...மீரா...மீரா...மீரா..
வேளை வரும்போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்

இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளூம் என்னை ஆளூம் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைனவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் அறிந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்


Get this widget | Track details | eSnips Social DNA


SONG : dhooraththil naan kaNda unn mugam
FILM : nizhalgaL
SINGER : S.Janaki
MD : IR
LYRICS :Vaali

Aaaaaaaa..aaaaaaaaa….aaaaaaaaa.aaaaaaa
dhooraththil naan kaNda unn mugam
nadhi dheeraththil thEn koNda yen manam(dhooraththil)
sugam nooraagum kaaviyamE..
oru sOgaththin aarambamE…
idhu unnai yeNNi paadum raagam..(dhooraththil)

vEinguzhal naadhamum geedhamum..aaaaaaa..aaaaaaaa.
aaaaa…aaaaaaaaa…aaaaaaaaa (vEinguzhal)
maiyalin yEkkamum dhaabamum
maayan unadhu leelai idhuvE..
aiyan unn thanjam yen nenjamE…
dhinam azhaithEn… prabhu unaiyE..
aadum kaatrilE… pudhu raagam thOndrumaa..(dhooraththil)

kaadhal yenum geedham paadi
urugum oru pEdhaiyaana meera..
(Meera… meera… meera... meera)
vELai varum bOdhu vandhu… kaakkum karam kaakkum yendru
veeNai meettum dhEvi uLLamE
theeraadha aasaiyOdu.. vaadaadha pookkaLOdu..
kaalai maalai poojai seidhu sErkkavillaiyaa
kanavu pOla vaazhivil yendhan
laala laala laala laala...
kavalai yaavum maara vENdum (kanavu)
irakkamum karuNaiyum unakkillaiyO
naaLum yenai aaLum thuNai neeyE yena vaazhndhEn
maravEn maravEn maravEn
unn ninaivugaL yennidam dhinam
uravin perumai maravEn
varum vizhi tharum adhil
uravugaL therivadhum oru sugam
vaanamum mEgamum pOlavE...
vaanamum mEgamum pOIavE
neendhiya kaalangaL aayiram
mEgam maraindha vaanin thanimai
indru naan kaNdadhum uNmaiyE..
dhinam azhaithEn.. prabhu unaiyE..
aadum kaatrilE.. pudhu raagam thOndrumaa… (dhooraththil)

Thursday, December 6, 2007

ராசாவே உன்னை விடமாட்டேன்டைரக்டர் ராஜ்கிரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனைக்கிளி படத்தில் ஜானகியம்மா குரலில் மற்றுமொரு அழகான மெலோடி பாடல் இது. மெட்டும் அம்மாவின் குரலும் மனதிற்க்கு ஓர் இதமான ஒத்தடம் தருவதுபோல் இருக்கும்.

படம்: அரண்மனைக் கிளி
இயக்குநர்: ராஜ்கிரன்
வருடம்:1993

ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆணாலும் வெட்கம் விட மாட்டேன்
ஓயாமலே மழை தூறலாம்
போகாதய்யா மண் வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை

ராசாவே உன்னை விடமாட்டேன்

கோரைப் புல்லை கிள்ளி
உனக்கென்ன ஒரு பாயை பின்னி வைத்தேன்

பேரை நித்தம் சொல்லி
உன்னைப் பற்றி பல எண்ணம் என்னி வைத்தேன்

கோவில் எனக்கு ஏதய்யா
ஒரு தூதுதான் போதும்
தேதி என்ன சொல்லய்யா
தங்க தாலிதான் போடு

பாவையின் பாட்டுத் தான்
பாடினால் ஓஓஓஓஒ

ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆணாலும் வெட்கம் விட மாட்டேன்

கிக்கீ கிக்கீ என்றே வண்ணக்கிளி
ஒன்று சத்தம் இட்டே செல்லும்
குக்கூ குக்கூ என்றே கானக்கருங்குயில்
சித்தம் தன்னைக் கொள்ளும்
ஆலம் விழுதாகவே மனம் ஆடிடும் போது
நாளூம் அது போலவே மழை நாடிடும் மாது

பாவையின் பாட்டுத் தான்
பாடினால் ஓஓஓஓஒ

ராசாவே உன்னை விடமாட்டேன்

ஓயாமலே மழை தூறலாம்
போகாதய்யா மண் வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை

ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆணாலும் வெட்கம் விட மாட்டேன்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, November 22, 2007

கோகுலத்து பசுக்களெல்லாம்இன்று அதிகாலை இந்த பாடல் எப்.எம்மில் பல நாட்கள் கழித்து கேட்டேன். கண்ணன் மீது பக்திப்பாடல் ஆல்பத்தில் வருகிறது. மனசுக்கு ஓர் ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியது இந்த பாடல். இந்த மாதிரி பாடல்கள் இனி எப்போது வரும் என்று ஒரே ஏக்கமாக இருந்தது. அம்மாவின் அந்த இனிமை குரலுடன், தபேலா, ஜால்ரா இசைகருவிகளின் இனிமை தேன் கானாமா? அல்லது தேவ கானமா? என்று நினைக்கவைத்து விட்டது. ரொம்ப நாட்கள் கழித்து கேட்டேன் உங்கள் செவிகளுக்கும் சேர்த்து..

ஆல்பம்: கிருஷ்னகானம்
படியவர்: எஸ்.ஜானகி

கோகுலத்து பசுக்களெல்லாம்
கோபாலன் குழலை கேட்டு
நாலுபடி பால் கறக்குது ராமாரே

கோகுலத்து பசுக்களெல்லாம்
கோபாலன் குழலை கேட்டு c
நாலுபடி பால் கறக்குது ராமாரே

அந்த மோகனின் பெயரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்னாரே

அந்த மோகனின் பெயரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்னாரே
ராமாரே.... ஹரே கிருஷ்னாரே...
ஹரே.. ஹரே.. ராமாரே.... ஹரே கிருஷ்னாரே...

கண்ணன் அவன் நடனமிட்டு
காலிங்கையை வென்ற பின்னால்
தண்ணீப்பாம்பின் நஞ்சுயில்லை ராமாரே

கண்ணன் அவன் நடனமிட்டு
காலிங்கையை வென்ற பின்னால்
தண்ணீப்பாம்பின் நஞ்சுயில்லை ராமாரே

அவன் கனி இதழில் பால் குடத்தில்
பூதகியை கொன்ற பின்னால்
அவன் கனி இதழில் பால் குடத்தில்
பூதகியை கொன்ற பின்னால்

கன்னியர்பால் வஞ்சமில்லை கிருஷ்னாரே
ராமாரே.... ஹரே கிருஷ்னாரே...
ஹரே ஹரே ராமாரே.... ஹரே கிருஷ்னாரே...

கோகுலத்து பசுக்களெல்லாம்
கோபாலன் குழலை கேட்டு
நாலுபடி பால் கறக்குது ராமாரே

குளத்தில் முங்கி குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்தில் உள்ள தாலி நிக்குது ராமாரே

குளத்தில் முங்கி குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்தில் உள்ள தாலி நிக்குது ராமாரே

பேரை திருத்தும் போது அவன் பெயரை
ஸ்ரீஇரங்கா என்று சொன்னால்
பேரை திருத்தும் போது அவன் பெயரை
ஸ்ரீஇரங்கா என்று சொன்னால்

அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்னாரே
ராமாரே.... ஹரே கிருஷ்னாரே...
ராமாரே.... ஹரே கிருஷ்னாரே...

படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பமெல்லாம்
பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரே

படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பமெல்லாம்
பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரே

அட படிப்பில்லாத ஆண்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
அட படிப்பில்லாத ஆண்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்

வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்னாரே
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்னாரே

கோகுலத்து பசுக்களெல்லாம்
கோபாலன் குழலை கேட்டு
நாலுபடி பால் கறக்குது ராமாரே

அந்த மோகனின் பெயரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்னாரே

ராமாரே.... ஹரே கிருஷ்னாரே...
ஹரே ஹரே ராமாரே.... ஹரே கிருஷ்னாரே...

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, November 15, 2007

பொன்னே பூமியடிஜானகியம்மாவின் இனியகுரலில் அபூர்வமான பல பாடல்கள் உள்ளன. இந்த பாடல் சமீபத்தில் எனக்கு கிடைத்தது. மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் வரும் இந்த பாடலில் அம்மாவின் குரலலும், வாணி மேடத்தின் குரலும் ஒவ்வொன்று போட்டி போட்டுகொண்டு கபடி ஆடும். மேலும், ஒரு இனிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

படம்: மனிதனில் இத்தனை நிறங்களா
பாடல்: பொன்னே பூமியடி
பாடகர்கள்: ஜானகியம்மா, வாணிஜெயாரம்
இசை: ஷியாம்

பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோஓ
தாலாட்டும் பச்சை தொட்டில்
சிரு சிரூ மணி வித வித நிறமடி

பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோஓ
தாலாட்டும் பச்சை தொட்டில்
சிரு சிரூ மணி வித வித நிறமடி

அணணப்பார்த்து சேர்ந்தால் தானடி பூமி பொன்னாகும்
அன்பை பார்த்து சேர்ந்தால் தானடி செங்காய் சீராகும்
பாயும் கண்ணீர் வெள்ளாமானால் மண்ணும் தாங்காது
அதிக தண்ணீர் வெள்ளாக்ககடு
அறிவு போனால் மானக்கேடு
நிஜமடி இது நிஜமடி நிஜமடி
நிஜமடி இது நிஜமடி நிஜமடி

பூவும் பொட்டும் மணியும்மென்றால் மண்ணில் அழகில்லை
பொங்கும் மங்கள வாழ்க்கை இன்றேல் பெண்ணில் அழகில்லை
பார்க்கும் கண்கள் இல்லையென்றால் வாழ்வில் சுகமில்லை
எந்த மண்ணில் என்ன பயிரோ
எந்த தலையில் என்ன எழுத்தோ
வருவது வரும் வரவிடு வரவிடு
வருவது வரும் வரவிடு வரவிடு

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, October 22, 2007

கருத்த மச்சான் கஞ்சத்தனம்புது நெல்லு புது நாத்து படம் எல்லோரும் பார்த்து இருப்பீங்க. சுகன்யாவின் நடிப்பு நன்றாக இருக்கும். இதோ ஜானகியம்ம அவங்களூக்காக ஒரு கலக்கல் பாட்டு இது. கருத்த மச்சான் பாடல் கேட்டு மகிழுங்கள்.


படம்: புது நெல்லு புது நாத்து
பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகியம்மா
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா
நடிகர்கள்: நெப்போலியன், சுகன்யா

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பாஆஆ
பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பாஆஆ
பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

கூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டு கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ளே மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத்திற மாமா
பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு
உன் மார்பில் சாயாம தூங்காத கண்ணு
என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பாஆஆ
பிப்பீ டும் டும் டும்
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

முளைச்சு இங்கே மூணு இலை விட்டவளும் நானே
என்ன கருக வைச்சு பார்க்குறயே காஞ்ச நிலம் போல
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டிப் போல
எப்போதும் உன் நேசம் மாறாது என் வாசம்
என் சேலை மாராப்பு நீ தானே ராசா
என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்பாஆஆ
பிப்பீ டும் டும் டும்
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, September 28, 2007

Gori Ka Saajan - Aakhree Raasta (Hindi)

hi janki amma's fans

Now posting another Superhit song "Gori Ka Saajan" from hindi movie "Akhree Raasta" 1986
This song is picturised on Amitabh Bachchan & Sridevi & Beutifully sang by S.Janki & Mohd. Aziz.View:

David D'Costa (Amitabh Bachchan) lives a relatively poor life in Bombay with his wife Mary D' Costa (Jayapradha) who is pregnant. He literally worships the Member of Parliament Chaturvedi (Sadashiv Amrapurkar), and is even willing to die for him. He introduces Mary to Chaturvedi, and with his blessings they name the new-born son James. Then one day while he is busy obstructing rail traffic, he gets arrested and lodged in a cell, and is bailed out by Mahesh (Anupam Kher) When he returns home he finds that Mary has committed suicide. She left a note blaming Chaturvedi for molesting her. An upset David goes to confront Chaturvedi, is intercepted by Police Inspector Roop Kumar Sahay (Dalip Tahil) and Dr. Verma (Bharat Kapoor), the evidence is destroyed, and he is sentenced to 20 years in prison for Mary's murder. He asks his friend Mahesh to look after James in his long absence. Twenty years later, David is discharged, he goes to visit Mahesh and is shocked to find that Mahesh has changed, he is no longer a boot-legger, he now lives a wealthy life-style, he wants David to forget the past, and live with his CID Inspector son James, who he has re-named Vijay (also Amitabh Bachchan). David is devastated with this news, but is determined to avenge his wrongful conviction and Mary's death, so he sets about to kill his tormentors one by one - the only obstruction he faces is none other than Vijay - who has sworn to protect all three men under any and all circumstances.

Cast:
Amitabh Bachchan .... Double role (David D'Costa/Vijay)
Sridevi .... Vinta Bhagnagar (Vijay's girlfriend)
Jayapradha .... Mary D' Costa
Anupam Kher .... Mahesh
Dalip Tahil .... Inspector Roop Kumar Sahay
Sadashiv Amrapukar .... Chautervedi
Bharat Kapoor .... Dr Verma
This is a remake of the Tamil film "Oru Kaidhiyin diary" (1984) (English: A Prisoner's Diary) starring Kamalahasan, Radha and Revathi. The story was written by K. Bhagyaraj and the film was directed by his guru Bharathiraja.

Movie Name: Aakhree Raasta (1986)
Singer: S. Janaki, Mohz. Aziz
Music Director: Laxmikant Pyarelal
Lyrics: Anand Bakshi
Year: 1986
Producer: Purnachandra Rao A
Director: Bhagyaraj K
Actors: Amitabh Bachchan,Sridevi

Information from here : en.wikipedia.org/wiki/Aakhree_Raasta
Thanks to Wikipedia.orgGorii Kaa Saajan Saajan Kii Gorii
Lo Jii Shuruu Ho Gayii Lav.H Storii
Vo Jaa Rahii Hai Merii Hiro_In.H
Hiiro Kaa Dil Kar Ke Chorii

Maakaa Naakaa Go
Roko Na Mujhe, Toko Na Mujhe
Chhu_O Na Mujhe, Chhe.Do Na Mujhe
Mat Kar Mere Sa.Ng Joraa\-Jorii

He, Gorii Kaa Saajan, Saajan Kii Gorii ...

Apanii Is Lav Storii Me.N Koii Vilan Na Aa Jaaye
Apanii Prem Tapasyaa Me.N Koii Vighn Na Aa Jaaye
Dil Kii Pata.Nge.N, Nayano.N Kii Dorii
Lo Jii Shuruu Ho Gayii Lav Storii
Taaraa Ram Pam Pam
Vo Jaa Rahii Hai Merii Hiro_In.H ...

Yaad Karo To Filmo.N Me.N Kyaa Kyaa Siin Dikhaate Hai.N
Kyaa Kyaa Siin Dikhaate Hai.N
Let Ke Baate.N Karate Hai.N Dau.D Ke Gaanaa Gaate Hai.N
Mai.N Piichhe Bhaagaa, Tuu Aage Dau.Dii
Lo Jii Shuruu Ho Gayii Lav Storii
Taaraa Ram Pam Pam
Vo Jaa Rahii Hai Merii Hiro_In.H ...

He, Gorii Kaa Saajan
He\-He
Saajan Kii Gorii
He\-He
Lo Jii Shuruu Ho Gayii Lav Storii
Taaraa Ram Pam Pam
Vo Jaa Rahe Hai.N Hiiro\-Hiro_In.H
Ek Duuje Kaa Dil Karake Chorii

Wednesday, September 26, 2007

ஊருசனம் தூங்கிருச்சு
ஜானகியம்மாவின் மென்மையான குரலில் சில பாடல்கள் நம்மை கேட்காமலே நம் மனக்கதவை தட்டாமலே மெல்ல திறந்து ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டு அழிச்சாட்டம் செய்யும் அந்த வகையில் இந்த பாடல் "ஊருசனம்" மெல்ல திறந்து கதவு என்ற படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் மேஸ்ட்ரோ ராசய்யா கூட்டு முயற்சியில் வந்த பாடல் தான் இது. இந்த படத்தில் எல்லா பாடல்களூம் போட்டி போட்டுக்கொண்டு நம்மை இசைதர்பாரின் சிம்மாசனத்தில் கொண்டு சேர்த்து அமரவைக்கும் இனிமையான பாடல்களை கொண்ட தேவாமிர்தபடம். எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடலிது. கேட்டு மகிழ்ச்சியாயிருங்கள்.

பாடல்: ஊருசனம் தூங்கிருச்சு
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி & மேஸ்ட்ரோ இளையராஜா
நடிகர்கள்: மைக் மோகன், அம்லா, ராதா

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு
கோலம் பாடும் பாட்டாலே
மயிலு இளம் மயிலு
மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே

உன்னை என்னி நானே
உள்ளம் வாடி போனேன்
கன்னி பொண்ணு நானே
என் மாமனேஏஏஏ என் மாமனே

ஒத்தயில அத்தமக
உன்ன நினைச்சு ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலயே
கால நேரம் கூடலியே

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

மாமன் உதடு பட்டு
நாதம் தரும் குழலு
நானா மாற கூடாதா ஆஆஆஆ
நாளும் தவம் இருந்து
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வராதா ஆஆ
மாமன் காதில் ஏறாதா

நிலா காயும் நேரம் நெஞ்சுகுள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரம் தான்
இந்த நேரம் தான்....
ஒன்ன என்னி பொட்டு வச்சேன்
ஒலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்கும் ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, September 19, 2007

marugElara O raaghavaa
SAPTAPADHI
SINGER: S.Janaki
LYRICS:TYAGARAJA KEERTHANA

Thanks to Ms.N.Usha, Hyderabad for posting Lyrics, lovely writeup and audio file.
-- Covai Ravee

THIS IS THE SONG FROM 80'S SUNG BY S.JANAKI, from the film
Saptapadhi. This is actually a thyagaraja keerthana,and this
song has been no music background very simple to hear and melodious in
her voice. All of you hear this song and enjoy the melodious of this song.

marugElara O raaghavaa
marugElara O raaghavaa
marugElara O raaghavaa aaaaa

marugEla charaachara roopa
paraatpara soorya sudhaakara lOchana
marugEla charaachara roopa
paraatpara soorya sudhaakara lOchana

marugElara O raaghavaa aaaa

anni neevanuchu antarangamuna
anni neevanuchu antarangamuna tinnaga
vedaki telisi konTinayya
anni neevanuchu antarangamuna tinnaga
vedaki telisi konTinayya

ninne gaani madinennajaala norulaa aaaa aa
ninne gaani madinennajaala norulaa
nannu brOvavayya tyaagaraajanuta

marugElara O raaghavaa
marugElara O raaghavaa aaaaa

-- Posted by : N.Usha, Hyderabad

Get this widget | Track details |eSnips Social DNA

Tuesday, September 18, 2007

காதல் வெண்ணிலாசெவாலியே சிவாஜி கனேசன் சாரைப் பற்றி அதிகம் விவரிக்க தேவையில்லை. நடிப்பில் அவர் ஒரு இமயம். மேலும் நடிகை ரேவதி நடித்த லக்ஷ்மி வந்தாச்சு என்ற இந்த படத்தில் இந்த அழகான பாடலை ஜானகியம்மா அருமையாக பாடியிருப்பார்கள். சரணத்தில் //பூமியெங்கும் பூ வசந்தம்.. நீ சிரித்தால் தேன் சுரக்கும்.. எங்கும் இளமை விருந்தாய் இருந்தாய்.. காவிரி சோலை நீ தரும் வேளை.. தேனும் பாலும் சூழல் போடும்// இந்த வரிகளீல் அவரின் குரல் அமிர்தமாக இருக்கும். இந்த படத்தின் மேலும் தகவல்களை தெரிவிக்கலாம்.

படம்: லக்ஷ்மி வந்தாச்சு
நடிகர்கள்: நடிகர் திலகம் சிவாஜி, ரேவதி
பாடியவர்: எஸ்.ஜானகி

காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது

காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது

பூமியெங்கும் பூ வசந்தம்
நீ சிரித்தால் தேன் சுரக்கும்
எங்கும் இளமை விருந்தாய் இருந்தாய்
காவிரி சோலை நீ தரும் வேளை
தேனும் பாலும் சூழல் போடும்

காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது

நான் படிக்கும் பா ஸ்வரங்கள்
உன்னடிக்கும் பூச்சரங்கள்
நந்தவனத்தில் மனத்தால் நினைத்தால்
பூங்கொடியோடு நீ விளையாடு
புள்ளி எல்லாம் கோலம் ஆகும்

காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது

காதல் வெண்னிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக்கொண்டது

Get this widget | Share | Track details

Thursday, September 13, 2007

நமக்குள் ஏன் அன்பே

Image and video hosting by TinyPic

இதோ அதிகம் கேட்கமுடியாத இந்தபாடல் ஜானகியம்மா, பாலுஜி இருவரும் பாடியிருக்கிறார்கள். எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. இந்த பாடலை கேளூங்கள் உங்களையும் அறியாமல் உங்கள் உதடுகள் வேறு ஒரு வரிகளை பாடும் அது போல மெட்டு கொண்ட பாடல். அந்த பாடலின் வரிகள் வருவதை உங்கள் உதடுகள் முனுமுனுப்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆமாம், சின்னக்குயில் சித்ரா, மனோ பாடிய பாடல் தான் அது. தெரியாதவர்களூக்காக அந்தபாட்டின் வரிகளை "மதுர மரிக்கொழுந்து வாசம்" எழுதுகிறேன். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் அந்த சின்னகுயில் சித்ரா மேடம் அழகாக பாடியிருப்பார்கள். இந்த பாடலில் இனிமையாக ஜானகியம்மாவும் கலக்கியிருப்பார்கள்.

போட்டோ: நன்றி www.spbala.com

படம்: காதல் தேவதை (மொழி மாற்றம் படம்)
நடிகர்: சிரஞ்சீவி, ஸ்ரீதேவி
உடனடி படத்தகவல் : நன்றி திரு.எஸ்.பாலா(www.prodigyhub.org)

குறிப்பு: கோப்பின் தரம் சிறிது குறைவாக இருக்கும் மன்னிக்கவும். தயவு செய்து ஒலியின் அளவை தாங்கள் விரும்பியபடி அதிகரித்துகொள்ளவும்.

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்

ஊறும் பூந்தேனும் அமுதம் தான் வாடி
பொன்வண்டும் நாடும் மொய்க்காது பாடி

அடியாத்தி உண்டாகும் உன் காயம்
நல்ல புரிஞ்சாட்டி பொன்வண்டின் மாயம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்

அங்கெங்கே நீ தொடும் என்ன
நான் தொடும் மெல்ல கையைக்கட்டி
கொஞ்சுதான் சின்னச் குட்டி
வெள்ளியிலான வெத்தலைப்பெட்டி
என்னை நீ தாலிகட்டி
மத்தளம் கொட்டி
போடனும் மெட்டி
உன்னை நான் மெல்லக்கட்டி
அள்ளற பொன்னு வெல்லக்கட்டி
சின்ன சின்ன தீபமிட்டு
நானும் மெல்ல மெத்தையிட்டு
நெஞ்சு நிறைய ஆசைப்பட்டு
சேரும் சேரும் தூக்கம் விட்டு

மின்னும் பொன்னா வஞ்சி நின்னாச்சு
கைப்பட்டதால கூச்சம் விட்டாச்சு
வண்டத்தான் கூத்தக்குயம்மா
தொட்டு முத்தாட சந்தோசமம்மா
அடி கைத்தொடவும் கண் படவும்
பாட்டு சொன்ன மாமன் இதோ

நமக்குள்
ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்

பட்டு மெத்தை வாங்கி வச்சி
பாலு வச்சி பழமும் வச்சி
பக்கம் இந்த பூவும் கொஞ்ச
மெல்ல மெல்ல கூடும் நெஞ்ச
நீயும் உன் வெட்கம் விட்டு
தோளைக்கட்டி அழகா தொட்டு
போதையில் துள்ளூம் மெட்டு
பருவக்கதை பேசுமடி
சேலை ஒன்னு கட்டும் பெண்ணு
ஹஹ எங்கும் இந்த கன்னிப்பொன்னு
ஆசையுடன் ஒட்டிக்கட்டி
யவ்வனத்தை பாடுமடி

உன்னப்பார்த்து வந்தேன் இங்கு மாமா நான்
கொஞ்சும் அதை கண்டேன் இங்கு மாமா
ரட்சிக்க தன்ணியத்தான் கூட
தினம் கட்டிலிலே பொங்கி எங்கு ஓட
அத நீ சொல்லவா நான் சொல்லவா
ஆசை என்னை அசைத்திடுதோ

நமக்குள்
ஏன் அன்பே அன்பே ஏக்கம்
அடி நீ எங்கு நின்னா என்ன லாபம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்
இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்

ஊறும் பூந்தேனும் அமுதம் தான் வாடி
பொன்வண்டும் நாடும் மொய்க்காது பாடி

அடியாத்தி உண்டாகும் உன் காயம்
நல்ல புரிஞ்சாட்டி பொன்வண்டின் மாயம்

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்

Get this widget | Share | Track details

Monday, September 10, 2007

மானாமதுரையிலே என்னோட

இசைக்குயில் ஜானகியம்மவுடன் சேர்ந்து மனோ பாடிய இந்த பாடலில் அம்மாவின் ஜாங்கிரி குரலில் ஒரு அழகான மெலோடி பாடல் இதோ நண்பர்களே.. //மானாமதுரையிலே ஜோடியா
மாமன் மடியினிலே ஹோய்...// சரணத்தில் வரும் இந்தவரிகளின் இனிமைதான் என்னை எங்கெங்கோ கொண்டு போகிறது. //புல்லுக்கட்டு மெத்தையிட்டு நீ
மல்லுகட்டு என்னைத்தொட்டு// மனோவும் மிகவும் அட்டகாசமாக அனுபவித்து அம்மாவுடன் போட்டி போட்டு பாடியிருப்பார். என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

படம்::நாடோடி மன்னன்
நடிகர்: திரு.சரத்குமார், மீனா
இசை: தேனிசை தென்றல் தேவா


மானாமதுரையிலே என்னோட
மாமன் குதிரையிலே
மாமன் குதிரையிலே நான்
வரனும் மானாமதுரையிலே

மானாமதுரையிலே என்னோட
மாமன் குதிரையிலே
மாமன் குதிரையிலே நான்
வரனும் மானாமதுரையிலே

மானாமதுரையிலே ஜோடியா
மாமன் மடியினிலே ஹோய்...
மானாமதுரையிலே ஜோடியா
மாமன் மடியினிலே
நான் ஒட்டி ஒட்டி பேசனுமே
உச்சந்தலை கூசனுமே.. அதாலே

மானாமதுரையிலே உன்னோட
மாமன் குதிரையிலே
மாமன் குதிரையிலே நீ
வரனும் மானாமதுரையிலே

தென்காசி ரயிலில் ஏறி
தெற்கத்தி சீமை போயி
தெம்மாங்கு பாட வேணும்
செம்பருத்தி காட்டுக்குள்ளே

குத்தால அருவி போலே
மெத்திலி குருவி போலே
கும்மாளம் போட வேணும்
கும்பக்கரை ஆத்து மேலே

கொத்துமல்லி வாசத்துலே நீ
கொஞ்சனுமே பாசத்துலே

புல்லுக்கட்டு மெத்தையிட்டு நீ
மல்லுகட்டு என்னைத்தொட்டு

இது வலைஞ்சுகொடுக்கும் பூவு
அன்பால வசிய பொடிய தூவு
அதால..

மானாமதுரையிலே என்னோட
மாமன் குதிரையிலே
ஹஹஹ..
மாமன் குதிரையிலே நான்
வரனும் மானாமதுரையிலே

Get this widget | Share | Track details

yaar bina chain kaha re - saaheb (hindi)hi janki amma's fans

This is my first post in this blog. I am very thankful to Ravi anna (my elder brother)who gave me this honour to present song of janki amma.

My first post is "Yaar bina chain kaha re" a superhit song produce byhindi film industry sang by janki amma & bappi lahiri from movie"saaheb"(1985) starring anil kapoor & amrita sing. This song is very popular even today with its remix. But I love original version & now posting the same. Music composed by Bappi Lahiri.yaar bina chain kahaan re
pyaar bina chain kahaan re
sona nahin chaandi nahi
yaar to mila, are pyaar karle - 2

koi naya sapana nigaahon mein to hain
koi naya saathi nayi raahon mein to hain
dil jo milenge takdeer banegi
jindagi ki nayi tasweer banegi
pyaar mein ye dil bekaraar karle
yaar bina chain kahaan re
pyaar bina chain kahaan re
sona nahin chaandi nahi
yaar to mila, are pyaar karle - 2

yaar hame paisa nahin pyaar chahiye
koi man chaha dildaar chahiye
hire moti aise jahaan dil na toole
sapano ka koi sansaar chaahiye
ye bhi hoga thoda intzaar karale
yaar bina chain kahaan re
pyaar bina chain kahaan re
(sona nahin chaandi nahi
yaar to mila, (are pyaar karle- 2) - 2

yaar Bina Chain Ka...

Friday, September 7, 2007

பால கனகமயமேடையில் மஞ்சுபார்கவி நடனமாட, சமையற்கட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாக சமையல் வேலைகளைச் செய்துகொண்டே அதே சமயத்தில் உயிரை விட நேசிக்கும் பரத நாட்டியத்தை அவ்வப்போது பார்த்துக்கொண்டு கையில் கரண்டிகளுடன் அதே அபிநயத்தைப் பிடித்து கமல் நடனமாட, மஞ்சுபார்கவியைப் போன்று தன் மகனும் மேடையேறி ஆடினால் எப்படி இருக்கும் என்று தாய் மனக்கண்ணில் கமல் மேடையில் ஆடுவதைப் போன்று கற்பனையில் ஆழ, அடையாளம் தெரியாது இருக்கும் அந்தக் கலைஞனை வெளிச்சத்திற்குக் கொண்டுவர அயராது முயலும் ஜெயப்ரதா கமல் நடனமாடுவதைப் புகைப்படம் எடுக்க - அந்த ஒரு பாடல் காட்சி ஆயுசுக்கும் போதும் என்று சொல்ல வைத்துவிடும்.

சலங்கை ஒலி மாதிரி ஒரு படம் மறுபடியும் வருமா என்று சந்தேகமாக இருக்கிறது. கமலுக்கு அந்தப் படம் ஒரு மைல் கல் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விட முடியாதபடி அப்படம் உருவாக உழைத்த அனைவருக்கும் அது ஒரு அற்புதக் குழந்தை.

வெட்டூர் சுந்தரராமமூர்த்தியின் பாடல் வரிகளில் ஜானகி அந்தப் பாடலை அற்புதமாகப் பாடியிருப்பார். பொருள் புரியாவிட்டாலும் மயங்க வைக்கும் இசையிலும் குரலிலும் நாள்பூரா கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும் பாடல் இது.

பால கனகமய சேல சுஜன
பரிபால கனகமய சேல சுஜன
பரிபால கனகமய சேல சுஜன
பரிபால ஸ்ரீ ரமா லோல வித்ருத ஷரஜால
ஷுபதா கருணாலவால கண நீல நவ்ய
வன மாலிகா பரண ஏ லா நீ தயராது
பராகு ஜேஸே வேலா ஸமயமு காது

ரரா ராரா ரரா
ரரா தேவாதி தேவா
ரரா மஹானு பாவா
ரரா தேவாதி தேவா
ரரா மஹானு பாவா
ரரா தேவாதி தேவா
ரரா மஹானு பாவா
ரரா ரஜீவ நேத்ரா
ரகுவார புத்ரா
ஸார தரா ஸுதா பூர ஹ்ருதயா
ரரா ராரா ஸாரதரா ஸுதா பூர ஹ்ருதயா
பரிவார ஜலதி கம்பீர
தனுஜா ஸம்ஹார தஸரத குமார புதா
ஜனவிஹார ஸகலா ஸ்ருதிஸார
நாதுபை ஏ லா நீ தயராது
ஸ ரி ம ரி ஸ தக தஜும்
க ப ம ப த ப ஜும்
ஸ நி ரி ஸ தக தஜும்
ஸ நி ஸ திம் ஸ நி ஸ ரி ஸ திம்
ஸ நி ஸ க ம ரி ஸ நி ரி ஸ திம்
ப த தக திமி தக தஜும்
ப ப ம ரி ம ம ரி ஸ
ஸ ரி ரி ம ரி ம ம ப தக ஜம்
ப ம க ம ரி ம ரி ஸ ரி ம ப ததிம் கிணதோம்
பா த நி ப ம ததிம் கிணதோம்
ஏ லா நீ தயராது
பராகு ஜேஸே வேலா ஸமயமு காது
ஏ லா நீ தயராது

Get this widget | Share | Track details

சின்னத் தாயவள்தளபதி படம் ரஜினிக்கு ஒரு மிகப் பெரிய திருப்பு முனை. அகண்ட திரையில் கருப்பு வெள்ளையில் துவங்கி ரயிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை வளர்ந்து வண்ணத்திரையில் பெரியவனாகி பின்பு... அது ஒரு நீண்ட கவிதையான படம். தேவாவாக மம்மூட்டியும், சூர்யாவாக ரஜினியும் - திரையில் காட்டப்பட்ட அந்த நட்பின் ஆழம் இன்னும் நினைவில் நிழலாடுகிறது. இறுதிக் காட்சிகளில் படத்தை முடிப்பதில் ஏகமாகத் தடுமாறியிருப்பார்கள. படம் முழுவதும் மணிரத்னத்திற்காக ரஜினியும் இறுதிக் காட்சிகளில் ரஜினிக்காக மணிரத்னமும் சமரசங்கள் செய்துகொண்டதாகத் தோன்றியிருக்கின்றது எனக்கு.

இசைஞானி இளையராஜா அவரது உச்சக்கட்டத் திறமையைப் பயன்படுத்தி இந்தப் படத்திற்காகப் பின்னணி இசையும் பாடல்களும் அமைத்திருப்பார் போல. அட்டகாசமான பாடல்கள். ராக்கம்மா கையத்தட்டு இன்றும் தாளம் போடவைக்கும். பாலு பல பாடல்களில் பின்னி எடுத்திருப்பார். அவரே பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு புளகாங்கிதமடைந்த பாடல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல். படத்தில் வராத ஒரு அற்புத பாட்டொன்று இருக்கிறது. 'புத்தம் புது பூ பூத்ததோ' என்று ஜேசுதாஸ் ஜானகி பாடியிருக்கும் பாடல் நரம்புகளைச் சுண்டக்கூடிய இசையுடன் அருமையான பாடல். படத்தின் நீளம் கருதி இப்பாடலைச் சேர்க்காது போனார்களோ என்னவோ.

ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடல் கேட்கும்போதே அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு போகும். அப்படியே நம்மை நெகிழச் செய்துவிடும். இதே பாடலை ரஜினி அம்மா ஸ்ரீவித்யாவை கோவிலில் முதன்முதலாகப் பார்க்கும்போதும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும் இந்தப் பாடலில் ஜானகி எப்படி உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் கேளுங்கள்.

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சிங்கார வேலனே தேவாஇசைக்குயில் ஜானகியம்மா ரசிகர்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கம். நான் ஜானகியம்மா யாகூ ரசிகர் குழுவில் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகின்றன. அவரின் ரசிகர்களூக்காக அவர் பாடிய பாடல்களை தேர்ந்தெடுத்து என்னை மிகவும் கவர்ந்த பாடல்கள் தரவேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு. இந்த தளம் இணைய நண்பர்களூக்காக
ஏற்படுத்தப்பட்ட தளம் இணைய தளத்தில் பல ஆன்லைன் தளங்கள் இருந்தாலும் இவை உங்களூக்கு வித்தியாசம இருக்கும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே திரு.சரண் ஓர் தளம் ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மாவின் பாடல்களை நான் வழங்கும் பாடல்கள் எல்லோரும் பல தடவை கேட்டிருப்பீர்கள் பாடல்களும் வைத்துருப்பீர்கள். இருந்தாலும் அவர் இந்த இசை உலகத்திற்கு தன் இனிய குரலால் வழங்கிய அமிர்தமான பாடல்களை திரும்பவும் தங்களூக்கு வழங்குவதில் பெருமையடைகின்றேன்.

அம்மா அவர்கள் பலருடன் பாடிய காதல் பாடல்கள், தனிமை பாடல்கள், பக்திப்பாடல்கள் யாவற்றையும் ஒவ்வொன்றாக வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களில் பலபேர் வேண்டுகோளுக்கிணங்கவும், என் நண்பர்களூக்காகவும் இந்த பதிவை தொடங்கியுள்ளேன்.
இன்று முதல் பதிவு ஆகையால் ஓர் கடவுள் பாடல் கேட்கலாம்.

என் இஷ்டதெய்வமான முருக கடவுள் மீது அவர் பாடிய ஓர் பாடல். இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் என் உடலில் ஓர் வித இனம் புரியாத புத்துணர்ச்சி தோன்றி மெய்சிலிர்க்க வைக்கும். என்ன காரணம் என்று தெரியவில்லை தன் இனிய குரலால் பாடிய ஜானகியம்மாவின் குரலை சொல்லவதா?, இசையமைப்பை பற்றி சொல்வதா? நாதஸ்வரமும், தவிலின் இசையுடன், அம்ம்பாவின் குரலும் பாடலில் ஒவ்வொன்றும் போட்டி போட்டி என் மனதை கொள்ளைக்கொண்டுபோயின. யாரைத்தான் அடிமையாக்கவில்லை இந்தபாடல்.
நாம் எத்தனை தடவை கேட்டாலும் சிறிதும் சலிக்கவைக்காத பாடல் இது. இந்த தளத்தின் முதல் பாடலாக வருகிறது கொஞ்சும் சலங்கை படத்தில் வரும் இந்த பாடலுகு நடித்த நடிகர் ஜெமினி கனேசனும், சாவித்திரியும் பாடலில் ஒன்றிப்போய் நம்மையும் நடிக்கவைத்திருப்பார்கள். எனக்காக இந்த பாடலை மறுமுறை கேளுங்கள்.

முதல் தடவையாக இந்த பாடலை பாடிய ஜானகியம்மா அவர்களூக்கும், எனது நண்பர்கள் திரு. எஸ்.பாலு, திரூ. ஜி. தாசரதி, திரு.ராதகிருஷ்னன், திரு.ஸ்ரீகாந்த், திரு.பெஞ்சமின் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கின்றேன். போட்டோ அனுப்பிவைத்த தாசரதி சாருக்கு நன்றி.

மேலும் இந்த ஒலிக்கோப்பின் தரம் சிறிது குறைவாக இருந்தாலும் கேட்பதற்க்கு இனிமையாக இருக்கும். பாடல் நடுவில் வரும் ஸ்வரங்கள், ஜதிகள் மற்றும் ஆலாபனைகள் தவறாக எழுதிவிடக்கூடாது என்ற ஆசையில் பாடலில் துவக்கத்தில் வரும் வசணத்தை மட்டும் எழுதியுள்ளேன். பாடலின் நாதஸ்வர இசையும், தவில் இசையும் இனிமையும் கேட்பவருக்கு இடைஞ்சலாக இருக்ககூடாது என்ற என்னத்தினாலும் பாடல் வரிகளை தவிர்த்துவிட்டேன். இனிவரும் பாடல்களில் பாடல் வரிகள் பதிய முயற்சி செய்கின்றேன். பாடலை கேட்டு குறைகளை தயங்காமல் இந்த பதிவில் கீழ் வரும் பெட்டியில் வழங்கினால் நான் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். இந்த பாடலின் பதிவின் போது அறிய தகவல்கள் தங்களூக்கு தெரிந்திருக்கும் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளாலாம் பாடலை கேளூங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

குறிப்பு: இது தமிழ் ப்ளாக் தமிழ் ஜானகி இணைய தள ரசிகர்களூக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலத்திலும் அவ்வப்போது வரும். ஆகையால் யாரும் வருத்தப்படக்கூடாது. தமிழில் எழுதினால் நான் ரசித்ததை அப்படியே எழுத முடியும் என்ற நம்பிக்கை. இதில் வேறு எந்தவித காரணமும் இல்லை. ஆகையால் உங்கள் ஆசிர்வாதத்தை தாருங்கள்.

இந்த பாடலைப்பற்றி விட்டுப்போன அறிய பல தகவல்கள் இணையதள நண்பர்கள் பகிந்துள்ளார்கள் சுட்டியை தட்டி பார்க்கவும். இந்த தளத்தின் பதிவாளருக்கு நன்றி.

http://muruganarul.blogspot.com/2007/01/blog-post_13.html

படம்: கொஞ்சும் சலங்கை
நடிகர்: திரூ.ஜெமினி கனேசன், சாவித்திரி
பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகி
இசை: திரு. எஸ்.வி.சுப்பையா நாயுடு
நாதஸ்வரம்: திரு,காரைக்குறிச்சி அருனாசலம்


சாந்தா உட்கார்
ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்க்கு ஓடோடி வந்த என்னை
ஏமாற்றிவிடாதே சாந்தா.

என்னங்க, உங்கள் நாதஸ்வரத்திற்கு முன்னாள்

தேனோடு கலந்த தென்னமுதம்,
கோலநிலவோடு சேர்ந்த குளிர்தென்றல்,
இந்த சிங்கார வேலன் சந்நிதியில்
நமது சங்கீத அருவிகள் ஒன்று சேரட்டும்
பாடு சாந்தா பாடு.

சிங்கார வேலனே தேவா

Get this widget | Share | Track details